அதிகாலை வந்த பஸ்ஸில்
ஒழிந்து கொண்டது
அவள் வாழ்வை மாற்றும் மர்மம்
கடற்கரை மணலில்
குஞ்சு மீன்களுடன்
காத்திருந்தாள் அவள்
தன் வாடிக்கையாளருக்காக
அந்த பஸ்ஸில் வந்த
நகரத்து ஆண் மகன்
இந்த கிராமத்தில் கால் வைத்ததும்
கரு முகில்கள் சூழ்ந்து கொண்டது
மகிழ்ச்சியும் கவலையும்
பொங்கி வழிய
மீன் கூடையுடன் ஓடுகிறாள்
அவள் வீட்டை நோக்கி
மழை அறிகுறி கண்ட அவனும்
ஓடுகிறான் ஒதுங்க இடம் தேடி
இருண்ட முகிலை
மின்னல் கிழிக்க
மருண்ட மக்களை
இடி பயமுறுத்த
சோவென அழுது
கண்ணீர் வடித்தது வானம்
அவள் வீட்டு முன்றலில்
அவள் கண்கள் நிலைகுத்த
அவள் கண்களில்
அவன் நிலைகுத்தினான்
பெய்யும் மழையில்
அவன் ஓடி ஒதுங்கியது
அவள் வீடு தான்
ஓடி வந்தவள் பாதங்கள்
வீட்டு வாசலில் நிலை குலைந்தது
அவன் அவளைப் பார்த்தான்
அவள் அவனைப் பார்த்தாள்
கண்கள் குறுங்கேள்விகள் எழுப்ப
அவன் புரிந்து கொண்டு பதிலளிக்க
துவங்கியதங்கே ஒரு காதல் கதை
இருவரும் உள்னுழைந்து
ஒழுகும் வீட்டில்
ஒத்துக்கங்கள் பார்த்தொதுக்கி
தொடங்கியது கதை
ஆரம்பத்தில் தயங்கைய அவள்
போகப் போக
கதைக்கத் தொடங்கினாள்
கதைகள் முடிந்ததும்
மௌனங்கள் பேசியது
ஒருவர் கண்கள் ஒருவரப்பார்க்க
நகர்ந்தன சில மணித்துளிகள்
திடீரென மௌனம் கலைத்தவன்
”உன்னை எனக்கு பிடித்திருக்கிறது
வருகிறாயா என்னோடு............?”
அவள் மௌனம் நீடித்தது
மழைச்சாரல் குறைய
விடை பெறுகிறான் அவன்
அவள் கண்களில் ஏக்கம்
தத்தளிக்க
எதையோ அவன்
திருடிச்செல்வதாய்
மனம் சொல்ல
அவள் உதடுகள் மட்டும்
தன் மௌன விரதத்தை
விட வில்லை
அவன் ஒவ்வொரு
காலடியையும்
கண்ணிமைக்காமல்
பார்த்துக்கொண்டிருந்தது
கண்கள்
அவன் அவள் வருகைக்காய்
காத்திருந்ததாய்
அடிக்கடி திரும்பிப் பார்த்தான்
இடைவெளிகள் கூடக்கூட
தவைப்புகளும் கூடியது
ஆனால் அவள்
அடக்கிக் கொண்டால்
அவன் சென்று விட்டான்
இரவுத் தூக்கமிழந்தாள்
காலையில் நிதானம் இழந்தாள்
சொல்லமுடியாச் சோகம்
அவளில் குடிகொள்ள
குமுறுகிறாள்
தொடரும். . . . . . . . . . . . . . . . . . . .