பல வகைப் பாடல்கள்
தம்பியோ பெண் திருடி தாயார் உடன் பிறந்த
வம்பனோ நெய் திருடும் மாமாயன் – அம்புவியில்
மூத்த பிள்ளையாரே முடிச்சவிழ்த்துக் கொண்டீரே – போமோவுங்
கோத்திரத்துக்குள்ள குணம்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்க வேண்டும்
ஓடையிலே என் சாம்பல் ஓடும் போதும்
ஒன் தமிழே சலசலத்து ஓட வேண்டும்
தாயோடு அறுசுவைபோம் தந்தையோடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் ஆயவாழ்வு
உற்றாருடன் போம் உடன்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலியோடு எவையும் போம்.
காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே – நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தாக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி.
கம்பகவி என்றபெயர் கொண்டகவி அண்ணல்
செம்பபல வாய்மொழிய தந்தகவி நன்று
அம்புயினிற் கயைதனை ஆணியது கொண்டு
தம்பனி முடித்தததை நெஞ்சிடத் துதிப்போம்.
பத்தாயிரம் கவிதை
முத்தாக அள்ளிவைத்த
சத்தான கம்பனுக்கீடு – இன்னும்
வித்தாகவில்லை என்று பாடு.
காலமெனும் ஆழியிலும்
காற்று மழை ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு – அது
சரித்திரத்திற்கு எழுதிவைத்த சீட்டு.
சீதை நடையழகும்
ஸ்ரீராமன் தோளழகும்
போதை நிறைந்ததெனச் சொல்லி – என்னை
போட்டான் மதுக் குடத்தில் அள்ளி.
ஸ்ரீராமன் தம்பியர்கள்
நான்காகி ஐந்தாகி
ஆறான கதையெல்லாம் கூறி – என்னை
ஆளுகிறான் மூளை தன்னில் ஏறி.
வாழை இலை தண்டு மலர்
காய்கனிகள் ஆனவுடன்
வாழையடி வாழையொன்று ஜனனம் – அது
வந்தவுடன் தாய் விழுந்து மரணம்.
உண்ட பணக்காரனவன்
தொந்தி என விம்மிவரும்
நண்டில் ஒரு பிள்ளை நண்டு ஜனனம் – அதை
கண்டவுடன் பெற்ற நண்டு மரணம்.
No comments:
Post a Comment